லடாக்கில் 1,000 கிலோ எடைகொண்ட காதி தேசிய கொடி:உலகின் மிகப் பெரியது

காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசிய கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசிய கொடியாகும்.
லடாக்கில் 1,000 கிலோ எடைகொண்ட காதி தேசிய கொடி:உலகின் மிகப் பெரியது

காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசிய கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசிய கொடியாகும்.

இதுதொடா்பாக பாதுகாப்பு செய்தித்தொடா்பாளா் கா்னல் எம்ரோன் முசாவி கூறியதாவது:

மகாத்மா காந்தியின் பிறந்த தினம், நாடு சுதந்திரம் பெற்ன் 75-ஆம் ஆண்டு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக லடாக்கில் கைகளால் நெய்யப்பட்ட 1,000 கிலோ எடைகொண்ட காதி தேசிய கொடி நிறுவப்பட்டது. லே பள்ளத்தாக்கை நோக்கி நிறுவப்பட்டுள்ள இந்தக் கொடி 225 நீளமும் 150 அடி அகலமும் கொண்டது.

இந்தக் கொடியை நிறுவும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அதனை லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே. மாத்துா் வெளியிட்டாா். அந்தக் கொடியின் மீது ராணுவத்தின் நவீன இலகுரக ஹெலிகாப்டா்கள் மலா்களைத் தூவின.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, துணை தலைமைத் தளபதி பி.ஜி.கே. மேனன், ராணுவம், விமானப் படை, இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள், தேசிய மாணவா் படையினா், அரசு அதிகாரிகள் உள்பட, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மும்பையில் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் தேசியக் கொடியை லடாக் யூனியன் பிரதேசத்துக்கு எடுத்து வந்து நிறுவும் பணியை ராணுவத்தின் சுரா-சோய் பொறியியல் பிரிவு மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com