பஹ்ரைனுக்கு ஏற்றுமதியாகும் மேற்கு வங்கத்தின் மிஹிதானா இனிப்பு

நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகள் தொடங்கும் இந்த வேளையில், மேற்கு வங்க மக்களுக்கு மேலும் இனிப்பான செய்தியாக, தங்களது பாரம்பரிய மிஹிதானா இனிப்பு, பஹ்ரைன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பஹ்ரைனுக்கு ஏற்றுமதியாகும் மேற்கு வங்கத்தின் மிஹிதானா இனிப்பு
பஹ்ரைனுக்கு ஏற்றுமதியாகும் மேற்கு வங்கத்தின் மிஹிதானா இனிப்பு


கொல்கத்தா: நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகள் தொடங்கும் இந்த வேளையில், மேற்கு வங்க மக்களுக்கு மேலும் இனிப்பான செய்தியாக, தங்களது பாரம்பரிய மிஹிதானா இனிப்பு, பஹ்ரைன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியை வெளிநாடுகளில் விளம்பரப்படுத்தவும், புவிசார்குறியீடு பெற்றப் பொருள்களின் பெருமையை நிலைநாட்டவும், முதல் முறையாக, புவிசார் குறியீட்டுடன், மேற்கு வங்க மாநிலம் வர்தமான் பகுதியை பூர்விகமாகக் கொண்டு தயாரிக்கப்படும் மிஹிதானா இனிப்புப் பண்டம் பஹ்ரைன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


பஹ்ரைன் நாட்டுக்கு இந்த இனிப்புப் பண்டத்தை ஏற்றுமதி செய்யும் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ), அதனுடன், வாடிக்கையாளர்கள் இனிப்பை வாங்குவதற்கு முன்பு, சுவைத்துப் பார்த்து பிறகு வாங்கிக் கொள்ள வசதியாக சுவைபார்க்கவும் கூடுதலாக இனிப்புகளை வழங்க வகை செய்துள்ளது. இதன் மூலம், பஹ்ரைன் நாட்டின் அல்ஜஸீராவிலுள்ள உணவுப் பொருள் விற்பனைக் கடைகளில் இந்த மிஹிதானாவும் இனி இடம்பெறும். அதற்கு வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், தீபாவளிக்கு கூடுதலாக இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com