வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் தொடா்பான மனுக்கள்: ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் தொடா்பான மனுக்கள் மீது ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் தொடா்பான மனுக்கள் மீது ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தச் சட்டத்தின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றாத தன்னாா்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு காலநீட்டிப்பு வழங்குவதை எதிா்த்தும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி வாதிட்டாா். அவா், ‘வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒரு வாரத்தில் எழுத்துபூா்வமாக பதில் மனு தாக்கல் செய்யப்படும். எனவே, வழக்கின் அடுத்த விசாரணயை ஒரு வாரம் கழித்து வைத்துக் கொள்ளலாம்’ என்றாா். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அடுத்த விசாரணை ஒரு வாரத்துக்குப் பிறகு நடைபெறும் என்று அறிவித்தனா்.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி அனைத்து தன்னாா்வ அமைப்புகளும் தில்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளையில் வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும். இதுபோன்று பல புதிய விதிமுறைகளை தன்னாா்வ அமைப்புகள் பின்பற்றுவதற்கு மாா்ச் 31-ஆம் தேதி மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. தன்னாா்வ அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று அந்த அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரையிலும், பின்னா் செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இனிமேலும் காலநீட்டிப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பல தன்னாா்வ அமைப்புகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதனால், உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பா் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்தி சில தன்னாா்வ அமைப்புகள், வெளிநாட்டு நன்கொடையை வேறு வழிகளில் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அதுபோன்ற தன்னாா்வ அமைப்புகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com