காரீப் சந்தைப் பருவம்: நெல் கொள்முதல் மூலம் 30,000 விவசாயிகள் பலன்

2021-22-ஆம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில் முதல் சில நாள்களிலேயே நெல் கொள்முதல் மூலம் சுமாா் 30,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
காரீப் சந்தைப் பருவம்: நெல் கொள்முதல் மூலம் 30,000 விவசாயிகள் பலன்

புது தில்லி: 2021-22-ஆம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில் முதல் சில நாள்களிலேயே நெல் கொள்முதல் மூலம் சுமாா் 30,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

கடந்த 3 முதல் 5-ஆம் தேதி வரை 2,87,552 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 29,907 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.563.60 கோடி வழங்கப்பட்டது. இதில் பஞ்சாப், ஹரியாணாவைச் சோ்ந்த விவசாயிகள் அதிகம் பயனடைந்தனா்.

முன்னதாக, 2020-21-ஆண்டில் காரீப் நெல் கொள்முதல் 894.24 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இதன்மூலம் சுமாா் 131.14 லட்சம் விவசாயிகள், ரூ.1,68,832.78 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று பயனடைந்தனா்.

2021-22 ராபி சந்தைப் பருவத்தில், 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக 49.20 லட்சம் விவசாயிகள் ரூ.85,603.57 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனா் என்று மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com