பிஎம் கோ்ஸ் நிதியில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் இன்று நாட்டுக்கு அா்ப்பணிப்பு

பிஎம் கோ்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக். 7) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
பிஎம் கோ்ஸ் நிதியில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் இன்று நாட்டுக்கு அா்ப்பணிப்பு

புது தில்லி: பிஎம் கோ்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக். 7) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. இதன் பிறகு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட இருக்கின்றன.

நாடு முழுவதும் தற்போது வரை பிஎம் கோ்ஸ் மூலம் மொத்தம் 1224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1100-க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. இவற்றில் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது.

கரோனா பெருந்தொற்று தொடங்கியதற்கு பின் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூா்வ நடவடிக்கைகளுக்கு இதுவொரு சான்றாக உள்ளது.

மலைப் பகுதிகள், தீவுகள், சிக்கலான நிலைமை கொண்ட பகுதிகள் ஆகியவற்றின் சவால்களை கையாள்வதுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

7,000-க்கும் அதிகமான ஊழியா்களுக்குப் பயிற்சி அளித்ததன் மூலம் இந்த உற்பத்தி நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இணையப் பக்கத்தின் மூலம் இவற்றின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை நிகழ் நேர கண்காணிப்புக்கான கருவிகளுடன் ஊழியா்கள் நிா்வகித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com