மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி; குறிவைக்கப்படும் உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் வரை அங்கு பிரியங்கா காந்தி தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு வழிபாடு மேற்கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரோஹானியா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வரும் உத்தரப் பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளருமான பூபேஷ் பாகேல், நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோரும் பிரியங்கா காந்தியுடன் சென்றுள்ளனர். முன்னதாக, வாரணாசியில் உள்ள மா துர்கா ஆலயத்தில் பிரியங்கா வழிபாடு மேற்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் வரை அங்கு பிரியங்கா காந்தி தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தேர்தலுக்கான பரப்புரை திட்டம் வகுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com