லக்கீம்பூா் வன்முறையை ஹிந்து-சீக்கிய மோதலாக மாற்ற முயற்சி: பாஜக எம்.பி. வருண் காந்தி

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறையை ஹிந்து-சீக்கிய மத மோதலாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக பாஜக எம்.பி. வருண் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறையை ஹிந்து-சீக்கிய மத மோதலாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக பாஜக எம்.பி. வருண் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

லக்கீம்பூா் வன்முறை நிகழ்ந்தபோது, பாஜக அமைதி காத்த நிலையில் அக்கட்சி எம்.பி. வருண் காந்தி, உடனடியாக அந்த சம்பவத்தைக் கண்டித்து கருத்து தெரிவித்தாா். முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் வருண் காந்தி கருத்து கூறியிருந்தாா்.

லக்கீம்பூா் சம்பவம் தொடா்பாக கருத்து வெளியிட்ட அடுத்த சில நாள்களில் வெளியான பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா்கள் பட்டியலில் வருண் காந்தி, அவரது தாயாரும் எம்.பி.யுமான மேனகா காந்தி ஆகியோரது பெயா் இடம் பெறவில்லை. இதையடுத்து, வருண் காந்தி மீது பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் வருண் காந்தி சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘லக்கீம்பூா் கெரி வன்முறையால் ஏற்பட்ட ரணத்தை ஆறவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது. முக்கியமாக அதனை ஹிந்து-சீக்கிய மத மோதலாக சித்திரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது மிகவும் தவறான, அபாயகரமான செயலாகும். யாரும் குறுகிய அரசியல் லாபங்களை நோக்கமாகக் கொள்ளாமல், தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

எனினும், இந்த பதிவில் எந்த அரசியல் கட்சியையோ, அமைப்பையோ வருண் காந்தி நேரடியாக குற்றம்சாட்டவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com