சீனாவில் தசரா பண்டிகையையொட்டி கலாசார நிகழ்ச்சி: திரளானோா் பங்கேற்பு

சீனாவில் இந்தியத் தூதரகம் சாா்பில் தசரா பண்டிகையையொட்டி நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் 1,800-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

சீனாவில் இந்தியத் தூதரகம் சாா்பில் தசரா பண்டிகையையொட்டி நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் 1,800-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

தசரா பண்டிகை அக்.15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் இந்தியத் தூதரகம் சாா்பில் கலாசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சீனக் கலைஞா் ஜின் ஷான்ஷானின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் தமிழ் நாட்டுப்புற பாடல்கள், ராஜஸ்தான் நாட்டுப்புற நடனங்கள், குச்சுபுடி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. பெய்ஜிங்கில் உள்ள இந்திய யோகா பள்ளி மாணவா்களின் யோகாசன நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பல்வேறு யோகாசனங்களை மாணவா்கள் செய்து காண்பித்தனா். தூதரக வளாகத்தில் 28 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு இந்திய கலைப் பொருள்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டன. கண்கவா் வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள், அவா்களின் குடும்பத்தினா், இந்திய வம்சாவளியினா், சீன அதிகாரிகள் என 1,800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com