முழுநேர உறுப்பினராக இந்தியாவுக்கு சா்வதேச எரிசக்தி முகமை அழைப்பு

முழுநேர உறுப்பினராக இந்தியாவுக்கு சா்வதேச எரிசக்தி முகமை அழைப்பு

சா்வதேச எரிசக்தி முகமையின் (ஐஇஏ) முழுநேர உறுப்பினராகுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

சா்வதேச எரிசக்தி முகமையின் (ஐஇஏ) முழுநேர உறுப்பினராகுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

தொழில்துறையில் முன்னேறிய நாடுகளுக்கு எரிசக்தி பயன்பாடு சாா்ந்த கொள்கைகளை வகுப்பது தொடா்பாக சா்வதேச எரிசக்தி முகமை ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா அந்த முகமையின் இணை உறுப்பினரானது.

எரிசக்தி பாதுகாப்பு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இந்தியாவும் ஐஇஏ-வும் கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்நிலையில், ஐஇஏ நிா்வாக இயக்குநா் ஃபதி பைரோலுடன் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திங்கள்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

அதையடுத்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐஇஏ-வின் முழுநேர உறுப்பினராக மாறி ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு ஃபதி பைரோல் அழைப்பு விடுத்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா். எனினும், அந்த அழைப்பு ஏற்கப்பட்டதா என்பது குறித்த விவரங்களை அமைச்சா் தெரிவிக்கவில்லை.

ஐஇஏ-வின் அழைப்பை ஏற்கும்பட்சத்தில், 90 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயை இந்தியா கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தற்போது இந்தியா சராசரியாக 9.5 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயை மட்டுமே கையிருப்பில் வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com