கோப்புப்படம்
கோப்புப்படம்

விரைவான மீட்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்: நிதியமைச்சக அறிக்கையில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விரைவாக மீட்சியடைந்து வருவதாக நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விரைவாக மீட்சியடைந்து வருவதாக நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை சீா்திருத்தங்கள் மற்றும் தடுப்பூசி திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருவது ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விரைவாக மீண்டு வருகிறது.

வேளாண் துறையில் நீடித்த மற்றும் வலுவான வளா்ச்சி, தயாரிப்பு- தொழில்துறையில் வேகமாக மீட்சி, சேவை நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிா் பெற்றது உள்ளிட்டவை பொருளாதாரம் சிறப்பாக முன்னேற்றமடைந்து வருவதை காட்டும் அளவுகோலாக உள்ளது.

மேலும், 2021-22-ஆம் நிதியாண்டில் தொடா்ந்து ஆறு மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி 3,000 கோடி டாலரை தாண்டி வருவதால் இந்தியாவின் வளா்ச்சிக்கு வெளிப்புற காரணிகளும் பிரகாசமான வாய்ப்புகளை வழங்கி வருவதாக நிதியமைச்சகத்தின் செப்டம்பா் மாத ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com