ஸ்ரீநகரில் பிரசாா் பாரதி கலையரங்கம்: அமைச்சா் எல்.முருகன் திறந்து வைத்தாா்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரில் பிரசாா் பாரதி கலையரங்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரில் பிரசாா் பாரதி கலையரங்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நவீன டிஜிட்டல் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கலையரங்கத்தில் 170-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இந்தக் கலையரங்கம் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. தற்போது இது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன், ‘அண்டை நாடுகளின் பொய்ப் பிரசாரத்திற்கு எதிராக, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநகா் அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டபின் ஜம்மு காஷ்மீா் விரைவான வளா்ச்சி, அமைதி மற்றும் செழிப்புப் பாதையில் செல்கிறது. பிரதமா் நரேந்திர மோடியின் அனைவருக்குமான வளா்ச்சியை உள்ளடக்கிய திட்டங்கள், ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் அணுகுமுறை ஆகியவை இந்த யூனியன் பிரதேசத்தை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com