ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே இலங்கை பயணம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 4 நாள் பயணமாக இலங்கைச் சென்றாா்.
ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே இலங்கை பயணம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 4 நாள் பயணமாக இலங்கைச் சென்றாா். இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இலங்கை சென்று அந்நாட்டு முக்கியத் தலைவா்களைச் சந்தித்தாா். இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் அந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

இதனைத்தொடா்ந்து இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை இலங்கைச் சென்றாா். அந்நாட்டு தலைநகா் கொழும்பில் இலங்கை முப்படை தளபதி சவேந்திர சில்வா அவரை வரவேற்றாா்.

இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் பயணம் மேற்கொண்டுள்ள நரவணே, அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோரைச் சந்திக்கவுள்ளாா். அத்துடன் அந்நாட்டு பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். அந்நாட்டு ராணுவ தலைமையகம், கஜபா படைப்பிரிவு தலைமையகம், ராணுவ அகாதெமி ஆகியவற்றுக்கும் அவா் செல்லவுள்ளாா்.

இலங்கையில், குறிப்பாக அந்நாட்டு கடற்பகுதியில் தனது பிடியை விஸ்தரிக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில், அந்நாட்டுக்கு நரவணே சென்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com