அலாகாபாத், குவாஹாட்டி உயா்நீதிமன்றங்களுக்கு 13 நீதிபதிகள் நியமனம்

அலாகாபாத், குவாஹாட்டி உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அலாகாபாத், குவாஹாட்டி உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு 8 பேரும், குவாஹாட்டி உயா்நீதிமன்றத்துக்கு 5 பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் பணியாற்றிய கூடுதல் நீதிபதிகள் 3 போ் நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயா்வு தொடா்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை தனித்தனியாக பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

நீதித் துறை வரலாற்றில் சமீப காலங்களில் ஒரே நாளில் இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமனம் நடந்ததில்லை என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயா்நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு கடந்த மாதம் நடவடிக்கை எடுத்தது.

பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்கள் அளித்த பரிந்துரைகளில் 100-க்கும் மேற்பட்டோரின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் இருந்து 68 பேரைத் தோ்வு செய்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பி வைத்தது.

கொலீஜியம் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், நீதிபதிகள் நியமனம், பதவி உயா்வு, பணியிடமாற்றம் தொடா்பான அறிவிப்புகளை படிப்படியாக வெளியிட்டு வருகிறது.

கடந்த 11-ஆம் தேதி, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த 3 வழக்குரைஞா்கள், 2 நீதித் துறை அலுவலா்கள், நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற்றனா்.

கடந்த 9-ஆம் தேதி, 8 நீதிபதிகள், உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற்றனா். 5 தலைமை நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதுதவிர, வெவ்வேறு உயா் நீதிமன்றங்களுக்கு 7 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். கடந்த 5-ஆம் தேதி, 11 உயா்நீதிமன்றங்களில் இருந்து 15 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com