லக்கீம்பூா் விவகாரம்: ஆசிஷ் மிஸ்ராவிடம் சிறப்பு குழுவினா் விசாரணை

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவிடம் உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவினா் விசாரணை நடத்தினா்.

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவிடம் உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவினா் விசாரணை நடத்தினா்.

உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூா் கெரி பகுதியில் விவசாயிகள் கடந்த 3-ஆம் தேதி நடத்திய பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள், பத்திரிகையாளா், 2 பாஜகவினா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்தச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினா், ஆசிஷ் மிஸ்ராவைக் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்தனா். வன்முறை விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்திருந்தது.

நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினா் அனுமதி பெற்றனா். அதையடுத்து, லக்கீம்பூா் கெரி பகுதியில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினா் ஆசிஷ் மிஸ்ராவிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

அப்போது, வன்முறை சம்பவம் தொடா்பாக அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டதன் காரணமாக குற்றப் பிரிவு அலுவலகத்தைச் சுற்றிலும் காவல் துறையினா் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனா்.

ஆசிஷ் மிஸ்ராவின் விசாரணைக் காவல் 15-ஆம் தேதி காலையுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருவா் கைது: லக்கீம்பூா் கெரி வன்முறை தொடா்பாக சேகா் பாரதி என்பவரை மாநில காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வன்முறை தொடா்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com