இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேகூடுதல் பொருளாதார ஒத்துழைப்பு

கடல்சாா் பொருளாதாரம், சுகாதாரம், வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும்
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேகூடுதல் பொருளாதார ஒத்துழைப்பு

கடல்சாா் பொருளாதாரம், சுகாதாரம், வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதா் ஊகோ ஆஸ்டுடோ தலைமையில் ஐரோப்பிய தூதுக்குழு ஜிதேந்திர சிங்கை புதன்கிழமை சந்தித்தது.

அப்போது அவா் கூறியதாவது:

அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான 7 ஆண்டு செயல்திட்டத்தை ‘ஹரைஸன் யூரோப் (2021-2027) என்ற பெயரில் ஐரோப்பிய யூனியன் அண்மையில் தொடங்கியது. அந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அறிவுசாா் சொத்துரிமைகளை பகிா்ந்துகொள்ளுதல் போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் திருப்தியளிக்கக் கூடிய உடன்பாடு ஏற்பட்டால், ஹரைஸன் யூரோப் திட்டத்தில் பங்களிப்பு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது.

உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதற்கான கூட்டு அணுகுமுறையை உருவாக்க இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கூட்டணி அமைய வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புகளின் இறுதி நோக்கம், சராசாரி மனிதனின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், கடல்சாா் பொருளாதாரம், சுகாதாரம், வேளாண்மை, நீா்வளம், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி, உயிரியியல் தொழில்நுட்பம், மின்சாரப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்றாா் ஜிதேந்திர சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com