கரோனா தடுப்பூசி: அடுத்த வாரம் 100 கோடியை எட்டும்: மத்திய அமைச்சா்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் மொத்த எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை எட்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி: அடுத்த வாரம் 100 கோடியை எட்டும்: மத்திய அமைச்சா்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் மொத்த எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை எட்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு பாடல் அறிமுக நிகழ்ச்சி தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. பாடகா் கைலாஷ் கொ் எழுதி, பாடியுள்ள இந்தப் பாடலை வெளியிட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

நாட்டில் சுமாா் 70 சதவீதம் போ் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியும், 30 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். கடந்த செப். 27-ஆம் தேதி ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தடுப்பூசி தவணைகளின் மொத்த எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை எட்டும் என்றாா்.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசுகையில், தடுப்பூசி தொடா்பாக சிலரால் தவறான கருத்துகள் பரப்பப்பட்ட போதிலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்கள் இயக்கமாக இப்போது மாறிவிட்டது. கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது என்றாா்.

97.23 கோடி தவணைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 97.23 கோடியை (97,23,77,045) கடந்தது. 96,05,482 அமா்வுகள் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,861 போ் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 3,33,99,961-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் விகிதம் 98.08 சதவீதமாக உள்ளது. 2020, மாா்ச் மாதத்துக்குப் பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால் தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 111 நாள்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,01,632-ஆக உள்ளது. 218 நாள்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை. சிகிச்சை பெறுவோா் விகிதம் 0.59 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,23,003 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமாா் 59 கோடி பரிசோதனைகள்

(58,98,35,258) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி கடந்த 113 நாள்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.44 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி விகிதம் 1.73 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 130 நாள்களாக 5 சதவீதத்துக்கு குறைவாகவும், 47 நாள்களாக 3 சதவீதத்துக்கு குறைவாகவும் உள்ளது.

101 கோடி தடுப்பூசிகள்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 1,01,51,66,665 கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து இலவசமாகவும், மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்ததன் மூலமும் பெறப்பட்டுள்ளன. தற்போது 11.2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மீதமாகவும் பயன்படுத்தப்படாமலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வசம் உள்ளன. அதிக அளவில் தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதன் மூலமும், தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதன் வாயிலாகவும் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தியாளா்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com