
கோப்புப்படம்
மீலாது நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இறைத் தூதா் நபிகள் நாயகம் பிறந்த புனித தினம் மீலாது நபியாக கொண்டாடப்படுகிறது. மீலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மிலாடி நபி வாழ்த்துகள். அனைத்து மக்களிடமும் அமைதியும், செழிப்பும் நிலவட்டும். கருணையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்கட்டும். ஈத் முபாரக்' என்று பதிவிட்டுள்ளார்.
Milad-un-Nabi greetings. Let there be peace and prosperity all around. May the virtues of kindness and brotherhood always prevail. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 19, 2021