கைது செய்ய வந்த காவல்துறையினரை அரவணைத்து கொண்ட பிரியங்கா காந்தி

காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க பிரயங்கா காந்தி லக்னோ - அக்ரா விரைவுப்பாதையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அரவணைத்து கொண்ட பிரியங்கா காந்தி
அரவணைத்து கொண்ட பிரியங்கா காந்தி

போலீஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, பிரியங்காவை தடுக்க சென்ற காவல்துறையினர், அவரிடம் செல்பி எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தங்களின் செல்போன்களில் புகைப்படங்களை எடுத்து கொள்ளும் காவல்துறையினர் மீது பிரியங்கா கை போட்டு சிரித்தபடி போஸ் கொடுப்பது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்பத்தாரை பார்த்து ஆறுதல் கூற பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். 

அப்போது, லக்னோ - ஆக்ரா விரைவுப்பாதையில் காவல்துறையினரால் பிரியங்கா தடுக்கப்பட்டு பின்னர், காவிலில் எடுக்கப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஆக்ராவுக்கு செல்ல அரசியல் தலைவர்களுக்கு ஆக்ரா மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தார். 

இதையடுத்து, பிரியங்கா காந்தி காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். முன்னதாக, லக்கிம்பூர் கெரி வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

25 லட்சம் ரூபாயை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அருண் வால்மீகியின் குடும்பத்தாரிடம் பிரியங்காவை பேச விடாமல் உத்தரப் பிரதேச அரசு தடுக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில், "அரசு ஏன் இந்தளவுக்கு அச்சம் கொள்கிறது.

அருண் வால்மீகி போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவருடைய குடும்பம் நீதி கோருகிறது. நான் அந்த குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன். நான் ஏன் தடுத்து நிறுத்தப்படுகிறேன்? இன்று பகவான் வால்மீகி ஜெயந்தி. புத்தரை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அதே நேரத்தில், அவரின் போதைனைகள் மீது தாக்குதல் நடத்துகிறார்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com