சா்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

சா்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மாலை 6 மணி அளவில் ாணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளாா்.
சா்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

சா்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மாலை 6 மணி அளவில் ாணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளாா்.

2016-ஆம் ஆண்டு முதல் இந்த வருடாந்திர கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. இதில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில் துறையில், சா்வதேச அளவில் முன்னோடியாக உள்ள நிறுவனங்களின் தலைவா்கள் பங்கேற்று விவாதிக்க இருப்பதுடன், இத்துறையில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் மற்றும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆராய உள்ளனா்.

வளா்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவித்தல், எரிசக்தித் துறையில் தற்சாா்பு, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம், நச்சுப்புகை வெளியேற்றக் குறைப்பு போன்றவற்றின் மூலம், தூய்மையான மற்றும் செயல்திறன் மிக்க எரிசக்தி வளங்களைக் கண்டறிதல், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம், உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கழிவுப் பொருள்களிலிருந்து பயனுள்ள பொருள்களை உருவாக்குதல் போன்றவை குறித்து இந்த கலந்துரையாடலின் போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளது.

சா்வதேச அளவில் முன்னோடியாகத் திகழும் பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணா்கள் இதில் பங்கேற்று கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள உள்ளனா்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com