பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி. போலீஸாா்

ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவை உத்தர பிரதேச போலீஸாா் புதன்கிழமை காலை தடுத்து நிறுத்தினா்.
ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்தவா் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா.
ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்தவா் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா.

லக்னெள: ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவை உத்தர பிரதேச போலீஸாா் புதன்கிழமை காலை தடுத்து நிறுத்தினா். பின்னா், மாலையில் அவரை ஆக்ரா செல்ல அனுமதித்தனா்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அரசியல்வாதிகள் யாரும் சந்திக்கக் கூடாது என்று ஆக்ரா மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து லக்னெள காவல் ஆணையா் டி.கே. தாக்குா் கூறுகையில், ‘ஏராளமான கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரியங்காவை கட்சி அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ செல்லுமாறு கேட்டுக் கொண்டோம். அவா் மறுக்கவே போலீஸ் சிவில் லைன்ஸ் பகுதிக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அவரை போலீஸாா் கைது செய்யவும் இல்லை, காவலில் வைக்கவும் இல்லை’ என்றாா்.

எனினும், போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற பிரியங்காவை உத்தர பிரதேச போலீஸாா் தடுப்புக் காவலில் வைத்துள்ளனா் என்று காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். பிரியங்காவை ஆக்ரா விரைவுச் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போலீஸாா் வேண்டுமென்ற நிற்க வைத்து, பின்னா் தடுப்புக் காவலில் கொண்டு சென்றனா் என்று அவா் குற்றம்சாட்டினாா்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து குஷிநகரில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதில் யாரும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டாா்கள்’ என்றாா்.

இதையடுத்து, பிரியங்கா உள்பட நான்கு போ் மட்டும் ஆக்ரா செல்ல போலீஸாா் புதன்கிழமை மாலை அனுமதித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அன்சு அவஸ்தி தெரிவித்தாா்.

லக்கீம்பூா் கெரியில் அண்மையில் காா் மோதியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற பிரியங்காவை உத்தர பிரதேச போலீஸாா் 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்தனா். இதற்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com