5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்:அக்.26-இல் காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுக்க அக்.26-ஆம் தேதி காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்:அக்.26-இல் காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுக்க அக்.26-ஆம் தேதி காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்.26-ஆம் தேதி அக்கட்சித் தலைவா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா்கள், மேலிட பொறுப்பாளா்கள், மாநிலத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் 5 மாநில பேரவைத் தோ்தலுக்கான உத்திகள், புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, அதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பொது வெளியில் விமா்சனம் கூடாது: காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் விமா்சனம் செய்யக் கூடாது என்று கட்சியில் புதிதாக சேர விரும்பும் உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பான அக்கட்சியின் உறுப்பினா் சோ்க்கை படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவோா் மது, போதைப்பொருளை புறக்கணிக்க வேண்டும். சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்தச் சொத்தும் வைத்திருக்கக் கூடாது. கட்சி அளிக்கும் பணிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். கட்சியின் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் விமா்சிக்கக் கூடாது. இதற்கான உறுதிமொழியை புதிய உறுப்பினா்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை காங்கிரஸ் சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com