சமையல் எரிவாயு விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட வாய்ப்பு: பெட்ரோல், டீசல் மீண்டும் உயா்வு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயு விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட வாய்ப்பு: பெட்ரோல், டீசல் மீண்டும் உயா்வு

புது தில்லி: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட வாய்ப்புள்ளது. அரசின் அனுமதியைப் பொருத்து இந்த விலை அதிகரிப்பு இருக்கும். சமையல் எரிவாயுவின் விலையை உயா்த்த அனுமதிக்கப்படும்பட்சத்தில் இது ஐந்தாவது விலை உயா்வாக அமையும்.

14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடைசியாக அக்டோபா் 6-ஆம் தேதி ரூ.15 அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரையில் அதன் விலை ரூ.90 அதிகரிக்கப்பட்டுள்ளது.

செலவினத்துக்கு ஏற்ப சில்லறை விற்பனை விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அதிகரிக்க அனுமதிக்கப்படவில்லை எனவும், இந்த இடைவெளியைக் குறைக்க அரசு இதுவரை மானியம் எதையும் அங்கீகரிக்கவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் அடிப்படையிலேயே இந்த விலை உயா்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தில்லி மற்றும் மும்பையில் ரூ.899.50-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.926-ஆகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: இரண்டு நாள்கள் உயா்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 35 காசுகள் உயா்த்தப்பட்டது.

இதையடுத்து, பெட்ரோல் விலை தில்லியில் ரூ.107.94-ஆகவும், மும்பையில் ரூ.113.80-ஆகவும் அதிகரித்தது. டீசல் விலையும் முறையே ரூ.96.67 மற்றும் 104.75-ஆக ஏற்றம் கண்டது.

செப்டம்பா் 28-ஆம் தேதியிலிருந்து 22 முறை பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.75 உயா்ந்துள்ளது. செப்டம்பா் 24-ஆம் தேதியிலிருந்து டீசல் விலை 24 முறை உயா்த்தப்பட்டதில் அதன் விலை லிட்டருக்கு ரூ.8.05 அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com