தேர்தல் விதிமீறல்: அஸ்ஸôம் முதல்வரை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஆணையம்

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அஸ்ஸôம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை எச்சரிக்கையுடன் தேர்தல் ஆணையம் விடுவித்தது.
தேர்தல் விதிமீறல்: அஸ்ஸôம் முதல்வரை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஆணையம்


புது தில்லி: தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அஸ்ஸôம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை எச்சரிக்கையுடன் தேர்தல் ஆணையம் விடுவித்தது.

அஸ்ஸôமில் உள்ள பவானிபூர், தௌரா, மரியாணி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, புதிய மருத்துவக் கல்லூரிகள், மேம்பாலங்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும் என்றும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

இது தேர்தல் விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. இதுகுறித்து பதிலளிக்க ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்து பதிலளித்த அவர், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத்தான் தெரிவித்ததாகவும், விதிமுறையை மீறி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்வதாகவும்  தெரிவித்திருந்தார்.

எனினும், முதல்வரின் பதிலில் திருப்தியடையாத தேர்தல் ஆணையம், "ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியிடும் புதிய திட்ட அறிவிப்புகள் போன்றவை வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டும் என்பதால் இது தடை செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் நட்சத்திர பிரசார பட்டியலில் உள்ள முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.  அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது வரும் நாள்களில் இதுபோன்ற அறிவிப்புகளை அவர் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. தேர்தல் விதிமுறை
களைப் பின்பற்ற வேண்டும்' என்று பதிலளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com