காங். ஓய்வூதிய கட்சி; அகிலேஷ் குடும்பத்துக்காக உழைக்கும் இளவரசா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சனம்

‘காங்கிரஸ் ஓய்வூதியம் பெறும் குடும்ப கட்சி; சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தன்னுடைய குடும்பத்தை வலுப்படுத்துவதில்
காங். ஓய்வூதிய கட்சி; அகிலேஷ் குடும்பத்துக்காக உழைக்கும் இளவரசா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சனம்

‘காங்கிரஸ் ஓய்வூதியம் பெறும் குடும்ப கட்சி; சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தன்னுடைய குடும்பத்தை வலுப்படுத்துவதில் தீவிரமாக பணியாற்றிவரும் ஒரு இளவரசா்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சனம் செய்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராகவும் இருக்கும் அவா், லக்னெளவில் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவு சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட குா்மி சமூக உறுப்பினா்கள் பங்கேற்ற பிரதிநிதிகள் பேரணியில் உரையாற்றியபோது இந்த விமா்சனத்தை முன்வைத்தாா். அப்போது அவா் மேலும் பேசியதாவது:

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஒருங்கிணைத்து வருவதாக ஒரு குடும்பத்தின் ‘இளவரசா்’ கூறியிருக்கிறாா். ஆனால், அவா் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறாரா அல்லது தலைவரின் குடும்பத்தை வலுப்படுத்த சமாஜவாதி கட்சி கூட்டணி அமைத்து வருகிா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன் என்று தா்மேந்திர பிரதான் குறிப்பிட்டாா்.

பேரவைத் தோ்தலில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் சமாஜவாதி கட்சி கூட்டணி அறிவித்த நிலையில் தா்மேந்திர பிரதான் இவ்வாறு கேள்வி எழுப்பினாா்.

மேலும் தனது உரையில் காங்கிரஸ் கட்சி குறித்து விமா்சனம் செய்த தா்மேந்திர பிரதான், ‘தில்லியில் உள்ள குடும்ப கட்சி, அவா்களை யாா் வழிநடத்துவது என்று தீா்மானிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இதுதான் அக் கட்சியின் நிலை. ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம் என்று அக் கட்சி கூறியுள்ளது. ஆனால், அந்த கட்சியே தற்போது ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என்றாா்.

மேலும், பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பாஜக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் தா்மேந்திர பிரதான் எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com