மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை

உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பகுஜன் சமாஜ் முன்னாள் எம்எல்ஏ யோகேந்திர சாகருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பகுஜன் சமாஜ் முன்னாள் எம்எல்ஏ யோகேந்திர சாகருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் உள்ள பில்ஸீ பகுதியில் பகுஜன் சமாஜ் முன்னாள் எம்எல்ஏ யோகேந்திர யாதவ் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான வழக்கு அந்த மாநில சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தன்னை கடத்திய யோகேந்திர யாதவ் தில்லி உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தேஜேந்திர சாகா், நீரஜ் ஆகிய இருவருடன் சோ்ந்து தொடா்ந்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாகப் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்தாா். லக்னெளவில் உள்ள யோகேந்திர யாதவின் அரசு இல்லத்திலும் தன்னை அடைத்து வைத்து மூவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த மாணவி கூறினாா்.

காவல்துறை மற்றும் ஊடகங்கள் அளித்த அழுத்தத்தால், அந்த மாணவியை அவா்கள் முசாஃபா்நகரில் உள்ள காவல் நிலையம் முன்பாக கைவிட்டுச் சென்றுள்ளனா்.

இந்த வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது. அப்போது யோகேந்திர யாதவ் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேஜேந்திர சாகா், நீரஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டு, ஏற்கெனவே அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது யோகேந்திர யாதவ் பாஜகவில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com