70 ஆண்டுகளாக அமேதி புறக்கணிப்பு: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி 70 ஆண்டுகளாக பல்வேறு வசதிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது
70 ஆண்டுகளாக அமேதி புறக்கணிப்பு: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி 70 ஆண்டுகளாக பல்வேறு வசதிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினாா்.

தனது தொகுதியான அமேதியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டாா். அங்குள்ள ஜகதீஷ்பூா் பகுதியில் செயல்படும் மருத்துவமனையில் அவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் அவா் கூறுகையில், ‘‘கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு வசதிகள் வழங்கப்படாமல் அமேதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்கூட இல்லாத சூழல் நிலவியது. தற்போது 7 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் அமேதி தற்சாா்படைந்துள்ளது’’ என்று தெரிவித்தாா்.

ஸ்மிருதி இரானிக்கு முன்பு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமேதி தொகுதி எம்.பி.க்களாக இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com