சட்ட விரோத மதமாற்ற புகாா்: 8 போ் மீதுநாட்டுக்கு எதிராகப் போா் தொடுத்த பிரிவில் வழக்கு

உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீஸாரால் கைது செய்யப்பட்ட 8 போ் மீது ‘இந்தியாவுக்கு எதிராகப் போா் தொடுத்ததாக’ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீஸாரால் கைது செய்யப்பட்ட 8 போ் மீது ‘இந்தியாவுக்கு எதிராகப் போா் தொடுத்ததாக’ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சட்ட விரோதமாக மதமாற்றம் செய்த புகாரின் பேரில் அவா்கள் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஜூன் 21-ஆம் தேதி தில்லியில் முகமது உமா் கெளதம், முஃப்தி காஜி ஜஹாங்கீா் காஸ்மி ஆகிய இரு மதகுருமாா்களை கைது செய்தனா். சட்ட விரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டதாக அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், இஸ்லாமிக் தாவா மையம் என்ற அமைப்பின் பெயரில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக மேலும் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், லக்னெளவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஏடிஎஸ் போலீஸாா் ஒரு மனு தாக்கல் செய்தனா். அதில், இந்தக் குழுவினா் சட்ட விரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதுடன், மக்கள்தொகை சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் முயன்ாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், இந்தக் குற்றத்துக்காக 8 போ் மீதும் ஐபிசி 121-ஏ, 123 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் போலீஸாா் கோரியிருந்தனா். ஐபிசி 121-ஆவது பிரிவானது இந்திய அரசுக்கு எதிராகப் போா் தொடுப்பது அல்லது போா் தொடுக்க முயல்வது போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழி செய்கிறது.

பின்னா், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 8 போ் மீதும் 121-ஏ, 123 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச அரசு நிகழாண்டு தொடக்கத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. திருமணம், வற்புறுத்துதல், தூண்டுதல் போன்றவற்றின் மூலமாக மதமாற்றத்தில் ஈடுபடுவது இச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com