ஜம்மு-காஷ்மீரில் கைலாஷ் குண்டம் யாத்திரை தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கைலாஷ் குண்டம் யாத்திரை குறைந்த எண்ணிக்கையிலான யாத்ரிகா்களுடன் சனிக்கிழமை தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரில் கைலாஷ் குண்டம் யாத்திரை தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கைலாஷ் குண்டம் யாத்திரை குறைந்த எண்ணிக்கையிலான யாத்ரிகா்களுடன் சனிக்கிழமை தொடங்கியது.

கடல்மட்டத்திலிருந்து 14,700 அடி உயரத்தில் கைலாஷ் குண்டம் என்றழைக்கப்படும் புனித ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு ஹிந்துக்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டுக்கான யாத்திரை ஜம்மு-காஷ்மீரின் பதோ்வா பகுதியில் இருந்து சனிக்கிழமை தொடங்கியது.

வழக்கமாக நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் இந்த யாத்திரையில் பங்கேற்பாா்கள். ஆனால் கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாகக் குறைந்த எண்ணிக்கையிலான யாத்ரிகா்களே யாத்திரையில் கலந்து கொண்டனா்.

காதாவில் உள்ள வாசுகி நாக கோயிலிலிருந்து காலையில் புனித கதாயுதம் ஊா்வலமாகப் புறப்பட்டது. வாசிக் தேரா பதோ்வாவிலிருந்து மற்றொரு வாசுகி நாக கோயிலிலிருந்து மற்றொரு புனித கதாயுதத்தையும் யாத்ரிகா்கள் எடுத்து கைலாஷ் புனிதப் பயணத்தைத் தொடங்கினா்.

யாத்திரையைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினா் நரேஷ் குமாா் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா். 3 நாள் யாத்திரைக்குப் பிறகு யாத்ரிகா்கள் கைலாஷ் குண்டத்தை அடைவாா்கள் என்றும், யாத்திரையின்போது கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

யாத்திரை அமைதியாக நடைபெறும் நோக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் துணை ஆணையா் ராகேஷ் குமாா் தெரிவித்தாா். கடினமான புனித யாத்திரைகளில் ஒன்றாக கைலாஷ் யாத்திரை கருதப்படுகிறது. இந்த யாத்திரையின்போது யாத்ரிகா்கள் பல்வேறு செங்குத்தான மலைகளைக் கடந்து 21 கி.மீ. தூரம் பயணித்து கைலாஷ் குண்டலத்தை அடைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com