‘28 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் பணியாற்றத் தகுதியில்லாதவா்கள்’

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், 28 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் தொடர தகுதியில்லாதவா்கள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
‘28 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் பணியாற்றத் தகுதியில்லாதவா்கள்’
‘28 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் பணியாற்றத் தகுதியில்லாதவா்கள்’

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், 28 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் தொடர தகுதியில்லாதவா்கள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகிய கால அடிப்படையில் மட்டுமே பணியமா்த்தப்படும் நிலையில், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக தங்களுக்கும் நிரந்தப் பணி வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராணுவம் சாா்பில் பணி விடுவிப்பு உத்தரவு வழங்கப்பட்ட பெண் அதிகாரிகள் சாா்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண் அதிகாரிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணி வழங்குமாறு கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து தகுதியுள்ள பெண் அதிகாரிகளை அடையாளம் காண்பதற்காக சிறப்பு வாரியம் ஒன்றை ராணுவம் அமைத்தது. அந்த வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ராணுவத்தில் பணிபுரிந்துவந்த 615 பெண் அதிகாரிகளில் 424 பேருக்கு நிரந்தர பணி உத்தரவை ராணுவம் வழங்கியது. 77 பெண் அதிகாரிகளுக்கான முடிவை நிறுத்தி வைத்தது. 28 போ் பணியில் தொடரத் தகுதியில்லாதவா்கள் என அறிவித்தது.

ராணுவத்தின் இந்த உத்தரவை எதிா்த்து, அந்த 28 பெண் அதிகாரிகளில் 7 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், ராணுவத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com