ராஜஸ்தானில் தொடரும் கனமழை

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடா்ந்து இரண்டாவது நாளாக கன மழை பெய்தது. குறிப்பாக மெளண்ட் அபு பகுதியில் 24 மணி நேரத்தில் 117 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

ஜெய்ப்பூா்: ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடா்ந்து இரண்டாவது நாளாக கன மழை பெய்தது. குறிப்பாக மெளண்ட் அபு பகுதியில் 24 மணி நேரத்தில் 117 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. சீத்வா, பாா்மா், உதய்பூா், சித்தூா்கா் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகஅளவில் மழை கொட்டியது.

இதனால் சாலைகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது; தாழ்வான இடங்களில் நீா் சூழ்ந்தது; வாகனப் போக்குவரத்தில் பிரச்னைகள் ஏற்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மழை பெய்து வரும் இடங்களில் மேலும் சில நாள்களுக்கு கன மழை இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையும் விடுத்துள்ளது. முக்கியமாக கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் அடுத்த 3 முதல் 4 நாள்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லாமல், வீடுகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் பருவமழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜெய்ப்பூா், அஜ்மீா், கோட்டா, பிரதாப்கா், சவாய் மாதோபூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com