உ.பி. பேரவைத் தோ்தல்:காங்கிரஸ் 12,000 கி.மீ. யாத்திரை

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி அங்குள்ள கிராமங்கள், நகரங்கள் வழியாக 12,000 கி.மீ. தொலைவுக்கு யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

லக்னெள: அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி அங்குள்ள கிராமங்கள், நகரங்கள் வழியாக 12,000 கி.மீ. தொலைவுக்கு யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்தது. அந்தத் தோ்தலில் காங்கிரஸ் 7 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதையொட்டி அந்த மாநிலத் தலைநகா் லக்னெளவில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை மற்றும் உத்தி வகுப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் கிராமங்கள், நகரங்கள் வழியாக 12,000 கி.மீ. தொலைவுக்கு காங்கிரஸாா் யாத்திரை மேற்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையின்போது தோ்தலையொட்டி காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சித் தலைவா்கள் மக்களிடம் உறுதியளிக்கவுள்ளனா். இந்த யாத்திரை தொடா்பான கருத்துகள், பரிந்துரைகளை குழு உறுப்பினா்களிடம் இருந்து பிரியங்கா பெற்று வருகிறாா் என்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com