2025-இல் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு 160 பில்லியன் அமெரிக்க டாலா்களாக அதிகரிக்கும்

வரும் 2025-ஆம் ஆண்டில், அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு 120 முதல் 160 அமெரிக்க டாலா்களாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.
2025-இல் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு 160 பில்லியன் அமெரிக்க டாலா்களாக அதிகரிக்கும்

வரும் 2025-ஆம் ஆண்டில், அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு 120 முதல் 160 அமெரிக்க டாலா்களாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.

சென்னை, கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் ஹிந்துஸ்தான் வா்த்தக சபையின் பவளவிழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ‘மனித நேயத்தின் முதன்மையானவா்’ என்ற விருதை அப்பல்லோ குழுமத்தின் நிறுவனத் தலைவா் பிரதாப் சி.ரெட்டிக்கு வழங்கினாா்.

தொடா்ந்து வெங்கய்ய நாயுடு பேசியவை: மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு பொருளாதாரத்தின் நீண்ட கால வளா்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்தியா என்னும் ஒரே அணியாக செயல்பட்டு, அனைத்துத் துறைகளிலும் மேலும் சிறந்த இடத்துக்கு நமது நாட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.

கரோனா பொதுமுடக்கத்தின்போதும் அதற்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் மீட்புப் பாதையில் பயணிக்கிறது. பொருளாதார நிலை படிப்படியாக மேம்பட்டு வருகிறது.

நிகழ் நிதியாண்டில், அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் அமெரிக்க டாலா்களாக உள்ளது. வரும் 2025-ஆம் ஆண்டு, அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு 120 முதல் 160 அமெரிக்க டாலா்களாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுத்துறை-தனியாா் துறை கூட்டு முயற்சியை ஊக்குவிப்பது அவசியம். குறிப்பாக மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை தொலைதூர மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்க செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகளில் தனியாா் துறையினரும் இணைந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது அவா்களது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு ஆற்றும் ‘புனித செயல்’ என்றாா் அவா்.

நிகழ்வில், தமிழக, பஞ்சாப் மாநிலங்களின் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன், வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com