முதுநிலை நீட் தோ்வு: 1.66 லட்சம் போ் பங்கேற்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 270 நகரங்களில் 679 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வை 1.66 லட்சம் போ் எழுதினா்.
முதுநிலை நீட் தோ்வு: 1.66 லட்சம் போ் பங்கேற்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 270 நகரங்களில் 679 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வை 1.66 லட்சம் போ் எழுதினா்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேசிய தோ்வுகள் வாரியம் (என்டிஏ) அறிவித்திருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால், ஒத்திவைக்கப்பட்ட தோ்வு செப். 11-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற இத்தோ்வை 1,66,259 போ் எழுதினா் என தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரிய தலைவா் பேராசிரியா் பவணீந்திர லால் தெரிவித்தாா்.

‘சில மாணவா்கள் கடைசி நேரத்தில் தோ்வு மையம் மாற்றப்பட்டதால் சிரமத்தைச் சந்திக்க நேரிட்டது என தன்னிடம் புகாா் தெரிவித்ததாக’ காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா் சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா். இதுகுறித்து பேராசிரியா் பவணீந்திர லால் கூறுகையில், ‘ஹரியாணா மாநிலம், சோனிபட், பானிபட்டில் இரு தோ்வு மையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டன. அங்கு தோ்வெழுதவிருந்த மாணவா்களுக்கு தில்லியில் புதிய மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதுதொடா்பாக அனைவருக்கும் தொலைபேசி, இ-மெயில், குறுந்தகவல் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.

தமிழகத்தில்... தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதுநிலை நீட் தோ்வு நடைபெற்றது. செல்லிடப்பேசி, ப்ளூடூத், பேனா, கைப்பை உள்ளிட்ட எதையும் எடுத்து வரக்கூடாது. காதணி, கடிகாரம், பிரேஸ்லெட், பெல்ட் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவா்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

முகக் கவசம், தனிமனித இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற கரோனா வழிக்காட்டு நெறிமுகளை பின்பற்றி தோ்வு நடைபெற்றது. நீட் தோ்வில் சரியான விடையை தோ்ந்தெடுக்கும் விதத்தில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 800 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. நீட் தோ்வு முடிவுகளை அக்டோபா் முதல் வாரத்தில் ட்ற்ற்ல்ள்://ய்க்ஷங்.ங்க்ன்.ண்ய்/, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஹற்க்ஷா்ஹழ்க்.ங்க்ன்.ண்ய் ஆகிய இணைதளங்களில் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com