கோவேக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்?: சுகாதாரத்துறை விளக்கம்

இந்த மாதம் இறுதிக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால்
நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால்

இந்த மாதம் இறுதிக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுகுறித்து நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசியது:

உலக சுகாதார அமைப்பினர் அறிவியலின் அடிப்படையில் முடிவெடுக்க காலவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களின் பயணத்திற்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காததால், உலக சுகாதார அமைப்பு ஒத்துழைப்பு முக்கியமானது.

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் பரிமாறப்பட்டு வருகிறது. மேலும், ஆவணங்களின் சரிபார்ப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதால், இம்மாத இறுதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். உலக சுகாதார அமைப்பினர் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com