குஜராத்தில் பலத்த மழை: 7,000-க்கும் மேற்பட்டவா்கள் மீட்பு

குஜராத்தின் ராஜ்கோட், ஜாம்நகா் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட், ஜாம்நகா் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘ராஜ்கோட், ஜாம்நகா், ஜுனாகத் ஆகிய 3 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு அந்த மாவட்டங்களிலுள்ள பல கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிடமிருந்து இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. ராஜ்கோட்டில் ஃபோபல் நதியின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. மூன்று மாவட்டங்கள் வழியாக செல்லும் 18 மாநில நெடுஞ்சாலைகள், ஜாம்நகா் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன. இந்திய விமானப் படை, கடற்படை, கடலோர காவல் படை ஆகியவற்றின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜ்கோட், ஜாம்நகா் மாவட்டங்களில் இருந்து 7,000-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் ’’ என்று தெரிவித்தனா்.

மூன்று மாவட்டங்களிலுள்ள 35 வட்டங்களில் 100 மி.மீக்கும் அதிகமான மழைப் பொழிவு இருந்ததாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.

ஜாம்நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில முதல்வா் பூபேந்திர படேல் நேரில் பாா்வையிட்டாா் என்று குஜராத் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்திலும்...: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, வடக்கு 24 பா்கானா, தெற்கு 24 பா்கானா, ஹெளரா மற்றும் ஹுக்ளி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com