தீபாவளி: தில்லியில் பட்டாசுகளுக்கு முழுத் தடை

தில்லியில் ஆபத்தான வகையில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக நிகழாண்டு தீபாவளியின் போது பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது மற்றும் பயன்படுத்துவதற்கு தில்லி அரசு முழுத் தடை விதித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தில்லியில் ஆபத்தான வகையில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக நிகழாண்டு தீபாவளியின் போது பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது மற்றும் பயன்படுத்துவதற்கு தில்லி அரசு முழுத் தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளியின் போது தில்லியில் கடுமையான காற்று மாசு அளவு இருந்ததால் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் முழு தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு தீபாவளி பண்டிகையின்போது, தில்லியில் அனைத்து விதமான பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு முழு தடை விதிக்கப்படும்.

அப்போதுதான், மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.

கடந்த ஆண்டு பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டதால் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. அதனால் பட்டாசுகள் மீதான முழு தடையைக் கருத்தில் கொண்டு வியாபாரிகள் பட்டாசுகளை இருப்பு வைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்றுகால முழுவதும் மோசமான காற்று மாசு இருக்கும் நகரங்களில் பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி தில்லியில் பெரும்பாலும் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு தில்லி தவிர, ராஜஸ்தான், ஒடிஸா, சிக்கிம், மேற்குவங்கம், சண்டீகா், உத்தர பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு தில்லியில் தீபாவளிக்கு முதல் நாளான நவம்பா் 6-ஆம் தேதி பட்டாசுக்கு முழுத் தடை விதிக்க தில்லி அரசு முடிவு செய்தது.

தில்லி காவல் துறையினா் ஏற்கெனவே பட்டாசுகள் விற்பனைக்காக தாற்காலிகமாக உரிமங்களை வழங்கியிருந்தனா். இதன் காரணமாக வியாபாரிகளும், டீலா்களும் இழப்பை சந்தித்தனா். மேலும், பட்டாசுகள் எளிதாக கிடைத்ததால் குடியிருப்புவாசிகள் தில்லியில் பட்டாசுகள் வெடித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

இதுபோன்ற சூழலைத் தவிா்க்கும் வகையில் கடந்த ஆண்டைப் போலவே அனைத்துவகையான பட்டாசுகளையும் விற்கவும், பயன்படுத்தவும், இருப்புவைக்கவும் உடனடியாக முழு தடை விதிக்கும் வகையில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com