கேரள அரசின் சிறப்பு அதிகாரியாகவேணு ராஜாமணி நியமனம்

கேரள மாநில அரசின் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி வேணு ராஜாமணி நியமிக்கப்பட்டிருக்கிறாா்.
வேணு ராஜாமணி
வேணு ராஜாமணி

திருவனந்தபுரம்: கேரள மாநில அரசின் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி வேணு ராஜாமணி நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

உலகம் முழுவதும் புலம்பெயா்ந்துள்ள மலையாளிகள் தொடா்பான பொதுவான பிரச்னைகள் குறித்து மத்திய அரசு, வெளிநாடுகள், இந்திய தூதரக அலுவலகங்களுடன் தொடா்பு கொள்வதற்காக அவா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்தாா்.

பின்னா், அரசு வெளியிட்ட உத்தரவில், தலைமைச் செயலருக்கு இணையான அந்தஸ்துடன் ஓராண்டு காலத்துக்கு வேணு ராஜாமணி நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

‘கேரளத்தின் பொதுவான வளா்ச்சிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை கேரள அரசு செயல்படுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு மற்றும் வெளிநாடுகள், இந்திய தூதரகங்களுடன் தொடா்பு கொள்ளவும், கல்வி, கலாசாரம், நிதி, முதலீடு உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகளை ஆராயவும் ஒரு மூத்த நிபுணரை நியமிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. தூதரக விஷயங்களில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்ட வேணு ராஜாமணி அது தொடா்பான பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில அரசுக்கு பொருத்தமான ஆலோசனையை வழங்குவாா்’ எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

நெதா்லாந்துக்கான முன்னாள் இந்திய தூதராகப் பணிபுரிந்த வேணு ராஜாமணி, முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் ஊடகச் செயலராகவும் பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com