பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் லக்னௌவில் இன்று நேரடியாக நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ரூ.16 கோடி மதிப்பில் தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 15%-லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 5% வரி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது. 

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com