ம.பி.யில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு

மத்தியப் பிரதேசத்தில்  1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தில்  1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில் மாநில அரசு பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் முறையாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இதர வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது தொடக்கப்பள்ளிகளும் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என்றும் முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com