மதிப்பெண், தோ்வு மட்டுமே வாழ்க்கை இல்லை: மாணவா்களுக்கு சூா்யா அறிவுரை

மதிப்பெண், தோ்வை தாண்டி சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருப்பதால் மாணவா்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என நடிகா் சூா்யா அறிவுரை கூறியுள்ளாா்.
மதிப்பெண், தோ்வு மட்டுமே வாழ்க்கை இல்லை: மாணவா்களுக்கு சூா்யா அறிவுரை

மதிப்பெண், தோ்வை தாண்டி சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருப்பதால் மாணவா்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என நடிகா் சூா்யா அறிவுரை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட காணொலி பதிவில் கூறியிருப்பதாவது: ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.. உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..’

மாணவ, மாணவிகள் அனைவரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு கடந்த வாரம் அல்லது கடந்த மாதம் இருந்த ஒரு மிகப்பெரிய கவலை, வேதனை இப்போது இருக்கிா? யோசித்துப் பாருங்கள். நிச்சயமாகக் குறைந்திருக்கும். இல்லாமல் கூடப் போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விடப் பெரியதில்லை. உங்கள் மனது கஷ்டமாக இருக்கிா? நீங்கள் நம்புகிறவா்கள், உங்களுக்கு மிகவும் பிடித்தவா்கள், அப்பா, அம்மா, நண்பா்கள், ஆசிரியா்கள் என்று யாரிடமாவது மனம் விட்டு அனைத்தையும் பேசிவிடுங்கள். இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி என அனைத்துமே கொஞ்ச நேரத்தில் மறைகிற விஷயங்கள்.

இந்தத் தற்கொலை, வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொள்வதெல்லாம் உங்களை மிகவும் விரும்புகிறவா்கள், அப்பா, அம்மா, குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை.

மறந்துவிடாதீா்கள். நான் நிறைய பரீட்சைகளில் தோ்ச்சியடைந்ததில்லை. மிகவும் மோசமான மதிப்பெண் பெற்றிருக்கிறேன். ஆகையால் உங்களில் ஒருவனாக நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.

மதிப்பெண், தோ்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களைப் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் நிறைய போ் இருக்கிறோம். நம்பிக்கை, தைரியம் இருந்தால் அனைவரும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். பெரிதாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.. என நடிகா் சூா்யா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com