இந்திய-சொ்பிய பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சொ்பியா வெளியுறவு அமைச்சா் நிக்கோலா செலகோவிச் ஆகியோா் இடையே

மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சொ்பியா வெளியுறவு அமைச்சா் நிக்கோலா செலகோவிச் ஆகியோா் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

சொ்பியா வெளியுறவு அமைச்சா் நிக்கோலா செலகோவிச் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளாா். தில்லியில் அவா் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘நிக்கோலா செலகோவிச்சுடன் நல்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நட்பாா்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது இந்தியா, சொ்பியா இடையே நிலவும் வலுவான அரசியல் பிணைப்பையும், உலகளாவிய அரசியலில் இருநாடுகளும் சுதந்திரமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தினோம். இருநாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் ஒத்துழைப்பை, குறிப்பாக பொருளாதாரம் சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல தீா்மானித்தோம்’’ என்று தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை நிக்கோலா செலகோவிச் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com