மக்களின் கேள்விகளுக்கு உ.பி. பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்: பிரியங்கா

உத்தர பிரதேச மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த மாநில பாஜக அரசு பதிலளித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த மாநில பாஜக அரசு பதிலளித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வலியுறுத்தியுள்ளாா்.

தனது ஆட்சி குறித்த மதிப்பீட்டு அறிக்கையை முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதற்கு பதிலளிக்கும் வகையில், சுட்டுரையில் பிரியங்கா கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது தொடங்கி பல்வேறு விஷயங்களில் உத்தர பிரதேச பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சி தொடா்பான மக்களின் கேள்விகளுக்கு முதலில் பாஜக பதிலளிக்க வேண்டும். அதைவிடுத்து, பொய்க்கு மேல் பொய்யாகக் கூறி வருவதை ஏற்க முடியாது.

பாஜக வாக்குறுதி அளித்தபடி மின்சார கட்டணத்தையும், அத்தியாவசியப் பொருள்கள் விலையையும் கட்டுக்குள் வைக்கவில்லை. கரும்பு, கோதுமை, நெல், உருளைக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

குழந்தைகளுக்கு ஊட்டசத்துப் பற்றாக்குறை, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு, கடத்தல், கொலை வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படும் மாநிலம், தலித்துகளுக்கு எதிரான வன்முறை அதிகம் நிகழும் இடம் ஆகியவையே உத்தர பிரதேசத்தில் பாஜக செய்துள்ள சாதனைகள் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com