'எண் ஒன்றை அழுத்தவும்': இந்த மோசடி எச்சரிக்கை உண்மையில்லை

மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.
'எண் ஒன்றை அழுத்தவும்' இந்த மோசடி எச்சரிக்கை உண்மையில்லை
'எண் ஒன்றை அழுத்தவும்' இந்த மோசடி எச்சரிக்கை உண்மையில்லை
Published on
Updated on
1 min read


ஹைதராபாத்: மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.

மக்களுக்கு காவல்துறை என்னதான் எச்சரிக்கைகளை அளித்தாலும், ஆசையோ, அதிகப் பணமோ, ஏதோ ஒன்று ஏற்படுத்தும் விருப்பத்தால் மக்கள் அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுகிறார்கள். பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறார்.

அதற்காகவே, புதுவிதமான மோசடிகள் வந்ததும் அது குறித்து காவல்துறையினரும் சமூக வலைத்தளங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றன. ஆனால் இதிலும் பாருங்கள் சிலர் பொய்யான எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டு மக்களை முட்டாளாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதில் ஒன்றுதான்.. எண் ஒன்றை அழுத்தவும் என்ற மோசடி எச்சரிக்கைத் தகவல். வாட்ஸ்ஆப்பில் பல குழுக்களில் இந்த எச்சரிக்கைத் தகவல் கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் பரவி வருகிறது.

அதாவது, தனது நண்பருக்கு இந்த மோசடி நடந்ததாகவும், அவருக்கு 912250041117 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டீர்களா என்று கேள்வி எழுப்பி, ஆம் என்றால் எண் ஒன்றை அழுத்தவும் என்று சொன்னதாகவும், அவரும் எண் ஒன்றை அழுத்தியதும், அவரது செல்லிடப்பேசி செயலற்றுப் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சைபர் குற்றப் பிரிவு காவலர்கள் சார்பில், இந்த தகவலில் உண்மையில்லை என்றும், மேற்குறிப்பிட்ட எண், தற்போது செயல்பாட்டில் இல்லை, எனவே இந்த மோசடி குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுவரை அதுபோன்று யாரும் ஏமாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மக்கள் யாரும் இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்களை உண்மை என்பதை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கும், மற்ற குழுக்களுக்கும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com