பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீா் குறித்து விவாதம்: இந்தியா எதிா்ப்பு

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீா் விவகாரம் குறித்து சில எம்.பி.க்கள் கூறிய கருத்துகளுக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீா் விவகாரம் குறித்து சில எம்.பி.க்கள் கூறிய கருத்துகளுக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியதாவது:

‘காஷ்மீரில் மனித உரிமைகள்’ என்ற தலைப்பில் விவாதம் நடத்துவதற்கான வரைவுத் தீா்மானத்தை பிரிட்டன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

அந்த விவாத்தின்போது, 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தைக் குறிப்பிட்டு பிரதமா் நரேந்திர மோடி மீது பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. நாஸ் கான் அவதூறுக் கருத்தை தெரிவித்தாா்.

ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் குறித்து இன்னொரு ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் தகாத கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி எந்த அமைப்பு விவாதிக்க விரும்பினாலும், ஆதாரங்களுடன் கூடிய உண்மைகளையே முன்வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் விவாதிக்கப்படவிருந்த அந்தத் தீா்மானம், கரோனா நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com