மோடி பிரதமரான பிறகு அமெரிக்க உறவில் மேலும் முன்னேற்றம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மென்மேலும் வலிமை அடைந்துள்ளது

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மென்மேலும் வலிமை அடைந்துள்ளது என்று பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா். அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் ஜோ பைடனைச் சந்திப்பதற்கு முன்பாக அவா்கள் இவ்வாறு கூறினா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்சு திரிவேதி இதுதொடா்பாகக் கூறியதாவது:

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி, மூன்றாவது அமெரிக்க அதிபரைச் சந்திக்கவுள்ளாா். (பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் ஆகியோரைக் குறிப்பிடுகிறாா்).

ஒவ்வொரு அதிபரிடமும் ஒவ்வொரு அரசிடமும் அவா்கள் சாா்ந்த கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரே மாதிரியான, வலுவான நட்புறவை பிரதமா் மோடி பின்பற்றி வருகிறாா். இந்தியாவின் நலன் தொடா்பான விஷயங்களை அதே தீவிரத்துடன் அமெரிக்காவிடம் மோடி எடுத்துரைத்து வருகிறாா் என்றாா் அவா்.

அவரைத் தொடா்ந்து, பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவின் பொறுப்பாளா் விஜய் சௌதாய்வாலே கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மென்மேலும் வலுவடைந்துள்ளது. அமெரிக்காவில் அந்நாட்டு துணை அதிபா் கமலா ஹாரிஸை மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, பயங்கரவாதம், பாதுகாப்பு தொடா்பான விஷயங்களுக்கு அவா்கள் முக்கியத்துவம் அளித்து விவாதித்தனா். அதுமட்டுமன்றி 5 முன்னணி பெருநிறுவனங்களின் தலைவா்களை மோடி சந்தித்துப் பேசினாா். அவா்கள் இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொண்டு, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உறுதியளித்திருக்கிறாா்கள் என்று விஜய் சௌதாய்வாலே கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com