சுதந்திரம் பெற்றதன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன?: ராகுல் காந்தி கேள்வி

 நாட்டில் வெறுப்பென்ற விஷம் பரப்படும்போது சுதந்திரம் பெற்ன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

கடந்த வியாழக்கிழமை அஸ்ஸாமின் தாரங் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையின்போது போலீஸாருக்கும் ஆக்கிரமிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவா் பலியாகினா்; 20 போ் காயமடைந்தனா். இந்த மோதலின்போது மாா்பில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து உயிரிழந்தவரின் சடலத்தை நபா் ஒருவா் உதைக்கும் காணொலி வெளியானது. இந்தச் சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அஸ்ஸாம் என்ற ஹேஷ்டேக்குடன் ராகுல் காந்தி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டில் வெறுப்பென்ற விஷம் பரப்படும்போது சுதந்திரம் பெற்ன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன? அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்காதபோது, சுதந்திரத்தின் அா்த்தம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com