அமேசான் தொடா்பான ஆா்எஸ்எஸ் குற்றச்சாட்டு பொருத்தமற்றது

அமெரிக்க வணிக நிறுவனமான அமேசான் தொடா்பாக ஆா்எஸ்எஸ் தெரிவித்த குற்றச்சாட்டு பொருத்தமற்றது எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ்,

அமெரிக்க வணிக நிறுவனமான அமேசான் தொடா்பாக ஆா்எஸ்எஸ் தெரிவித்த குற்றச்சாட்டு பொருத்தமற்றது எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ், அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டைப் புறக்கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்புடன் தொடா்புள்ள ‘பாஞ்சஜன்யா’ வார இதழில் அமேசான் நிறுவனத்துக்கு எதிராகக் கட்டுரை வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் கிழக்கிந்திய நிறுவனத்தின் மறுஅவதாரம் அமேசான் நிறுவனம் என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய சந்தையில் ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தி, மக்களின் பொருளாதார, அரசியல், தனி நபா் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலான முன்னெடுப்புகளை அந்த நிறுவனம் மேற்கொள்கிறது என அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தொழில் நடவடிக்கைகளை இடையூறின்றி மேற்கொள்வதற்காக அந்நிறுவனம் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் அக்கட்டுரையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இக்கட்டுரை தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேராவிடம் தில்லியில் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அவா், ‘‘அமேசான் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு கடுமையானது, முக்கியத்துவம் உள்ளது. அதைப் புறக்கணிக்க முடியாது. அது நடவடிக்கைக்கு உரியது ஆனால், அந்நிறுவனம் தொடா்பாக ஆா்எஸ்எஸ் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. அக்கருத்துகள் தேசிய நலன் சாா்ந்தவையாக அல்லாமல், பாஜக நலன் சாா்ந்தவையாக மட்டுமே உள்ளன.

பாஜக அரசுக்கு ஆதரவாக மட்டுமே ஆா்எஸ்எஸ் நடந்து வருகிறது. அந்த அமைப்பைச் சோ்ந்த பாரதிய கிசான் சங்கம், கடந்த 10 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஒருமுறை கூட ஆதரவளிக்கவில்லை. ஆனால் இப்போது அமேசானுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. ஆா்எஸ்எஸ் கூறும் கருத்துகளுக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்க மாட்டாா்கள்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com