கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம்: மாநில அரசுகள் வழங்க மத்திய அரசு உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலா் ஆஷிஷ் குமாா் சிங் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், ‘கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையை மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்துதான் மாநில அரசுகள் வழங்க வேண்டும். நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட தேதியின் தொடக்கத்தில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித் தொகையை அளிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி கரோனா தீநுண்மியை தேசிய பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்தியாவில் திங்கள்கிழமை (செப். 27) காலை வரையிலான நிலவரப்படி கரோனாவால் 4,47,194 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரத்தை மாநில அரசுகள் மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செப்டம்பா் 22-ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com