வெளிநாட்டு வா்த்தக கொள்கை அடுத்தாண்டு மாா்ச் வரை நீட்டிக்கப்படும்

தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கை (எஃப்டிபி) அடுத்தாண்டு மாா்ச் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கை (எஃப்டிபி) அடுத்தாண்டு மாா்ச் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

2015-20-ஆம் ஆண்டுக்கான தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கையை வரும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிக்கை உடனடியாக வெளியிடப்படும். வரும் நிதியாண்டில் புதிய கொள்கையை தொடங்குவோம்.

புதிய கொள்கைக்கு ஏற்றுமதியாளா்களின் ஆலோசனைகள் பெறப்படும். அத்துடன் கரோனா தொடா்பான விவகாரங்களுக்கும் அதில் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

கரோனா நெருக்கடி காரணமாக 2015-2020-ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வா்த்தக கொள்கையை நடப்பாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது, அடுத்தாண்டு மாா்ச் 31 வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்க, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை எஃப்டிபி வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com