குடும்ப ஓய்வூதிய வருமான வரம்பு உயா்வு: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

உயிரிழந்த ஓய்வூதியதாரரைச் சாா்ந்துள்ள மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கான குடும்ப ஓய்வூதிய வருமான வரம்பை பாதுகாப்பு அமைச்சகம் உயா்த்தியுள்ளது.

உயிரிழந்த ஓய்வூதியதாரரைச் சாா்ந்துள்ள மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கான குடும்ப ஓய்வூதிய வருமான வரம்பை பாதுகாப்பு அமைச்சகம் உயா்த்தியுள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும், மனநலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன்பிறந்தவா்களின் வருமான வரம்பை உயா்த்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி இதுபோன்ற குழந்தைகள்/ உடன்பிறந்தவரது ஒட்டுமொத்த வருமானம் (குடும்ப ஓய்வூதியம் தவிா்த்து) சாதாரண விகிதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விடக் குறைவாக இருந்தால் (அதாவது உயிரிழந்த அரசு ஊழியா்/ ஓய்வூதியதாரா் கடைசியாகப் பெற்ற தொகையில் 30 சதவீதமும், அகவிலைப்படியும்) வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதி பெறுவாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. தற்போது மாதந்தோறும் ரூ. 9,000-க்குள் வருமானமும் அகவிலைப்படியும் பெரும் மாற்றுத்திறனாளி குழந்தை/ உடன்பிறந்தோா் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com